A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 02 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேளம்பாக்கம்
தாழம்பூரை அடுத்த கிருஷ்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள த்ரிசக்தி அம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாழம்பூரை அடுத்த கிருஷ்ணா நகரில் த்ரிசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில், சரஸ்வதி, அஷ்டலட்சுமி மற்றும் மூகாம்பிகை அம்மன் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அவை நிறைவடைந்ததால் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்பேரில், கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து சிறப்பு வேள்விகள் நடைபெற்றன.
இந்நிலையில், யாகசாலையில் அமைக்கப்பட்டிருந்த கலசத்துக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், முகூர்த்தத்தில் அர்ச்சகர்கள் மூலம் மூலவர் விமானம் மற்றும் ராஜகோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் கிருஷ்ணன்குட்டி தலைமையிலான கோயில் நிர்வாக குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.
52 minute ago
2 hours ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
3 hours ago
9 hours ago