A.K.M. Ramzy / 2021 மார்ச் 11 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
நடிகர் சங்கத்தில் பேசியது அரசியலில்லையென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசவன் மீது நீங்கள் கடுமையாக விமர்சனம் வைத்திருந்தீர்களே? இப்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டுச் சேர்ந்துள்ளதே வென சரத்குமாரிடம் கேட்டதற்கு "நான் எந்தவொரு விமர்சனமும் வைக்கவில்லை. நடிகர் சங்கத்தில் இருந்தபோது பேசியது அரசியல் ரீதியானது அல்ல. குறிப்பிட்ட விஷயத்தில் பேசியதை இறக்கும் வரை ஞாபகம் வைத்திருந்தால் நான் மனிதன் கிடையாது.
சரத்குமார் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் செய்தியாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்;
அப்படி பார்த்தால் மனோரமா ரஜினியை கடுமையாக பேசியுள்ளார். அதன்பிறகு, ரஜினி மனோரமாவை தன் திரைப்படங்களில் நடிக்க வைத்தார். கோபம் சில சமயங்களில் வெளிப்பட செய்யும். அதனை மறக்க வேண்டும். வைகோ திமுகவை விமர்சித்தது இல்லையா?. சீமானை கூட நான் அழைத்து பேசினேன். ஒவ்வொரு வருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. கமலிடம் பேசியபோது அவருக்கு ஆர்வம் இருந்தது. அதனால் இணைந்தோம் என்றார்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago