A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை ;
சின்னத்திரை நடிகை சித்ராவின் நகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்குத் தொடர்பில் கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, பொலிஸார் தரப்பில் , சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப் பிரிவுபொலிஸ் விசாரணைக்கு மாற்றப் பட்டிருந்தது. இதுவரை 13 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன.
மேலும், சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு, நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது.
வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணை க்கு வந்தது. அப்போது பொலிஸார் தரப்பில், 'சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகப்பட்டதால் தான் தற்கொலை செய்து கொண்டார்.
சித்ராவின் நகங்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தொலைபேசி உரையாடல்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் அறிக்கைகள், பெப்ரவரி 10ஆம் திகதி கிடைத்துவிடும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனைப் நீதிபதி, விசாரணையை பெப்ரவரி 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago