Janu / 2023 ஜூலை 24 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறந்து போன வளர்ப்பு நாய்க்கு சிலை வைத்து ஏழாம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள அம்பாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானபிரகாஷ் ராவ்.
அவர் ஆசை ஆசையாக வளர்த்து வந்த அஞ்சி என்ற பெயருடைய நாய் ஏழு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டது. நாய் இறந்தபின் அதன் உடலை தன்னுடைய விவசாய நிலத்தில் புதைத்த ஞான பிரகாஷ் ராவ் அங்கு ஒரு சமாதி கட்டி நாய்க்கு சிலை வைத்தார்.
அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் நாய் இறந்த நாளன்று படையல் போட்டு பூஜை நடத்தி நாயின் நினைவு நாளை அனுஷ்டித்து வருகிறார். இன்று அந்த நாய்க்கு நினைவு நாள் ஆகையால் இன்றும் நாய் சிலைக்கு பூஜைகள் நடத்தி இறந்து போன முன்னோர்களுக்கு செய்வது போல் படையல் போட்டு நினைவு நாளை கடைப்பிடித்தார் ஞான பிரகாஷ் ராவ்.

20 minute ago
29 minute ago
37 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
29 minute ago
37 minute ago
41 minute ago