Ilango Bharathy / 2022 ஏப்ரல் 08 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்மு காஷ்மீரில் பாடசாலைக்கு திலகம் அணிந்து வந்த மாணவிகளை ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் ஹடுரீன் பகுதியில் உள்ள அரச பாடசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இடம்பெற்ற விசாரணையில் ” குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் நான்கு மாணவிகள் நெற்றியில் திலகமிட்டவாறு பாடசாலைக்கு வந்துள்ளதாகவும், இதன்போது மத அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக திலகம் இட்டிருந்ததற்காக அவர்களை அப்பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் அடித்ததாகவும், கொச்சையான வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தமது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவமான அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு இது குறித்து வெளியான வீடியோவொன்றும் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago