Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 15 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
10ஆம் வகுப்பு மாணவியொருவர் பாடசாலைக் கட்டிடமொன்றின் 3ஆவது மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் உள்ள பாடசாலையொன்றிலேயே அண்மையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினத்தன்று கட்டடத்தின் 3ஆவது மாடியில் இருந்து அம்மாணவி கீழே குதிக்க முற்படுவதை அறிந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்,அவரை குதிக்க வேண்டாம் எனக் கூறியதாகவும், எனினும் அதனைப் பொருட்படுத்தாத அவர், மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட பாடசாலை நிர்வாகத்தினர் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் அவருக்கு கை கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ”கல்வி கற்க விருப்பமில்லாத நிலையில், பெற்றோர் வலுக்கட்டாயமாக படிக்க அனுப்பி வைத்ததால் அவர் உயிரை மாய்க்க முடிவு செய்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .