Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 08 , பி.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூருவில் 8 ஆண்டுகள் பதுங்கி இருந்த காஷ்மீர் பயங்கரவாதி கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் ஆதார் அட்டையில் பெயரை மாற்றியிருப்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பின் கமாண்டராக இருந்து வந்த இவர், இளைஞர்கள் பலரை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்பிலும் சேர்த்து வந்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதி பெயரை மாற்றிக்கொண்டு பெங்களூரில் வசிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனையடுத்து, பெங்களூருக்கு வந்த பொலிஸார், தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.
அவரது நடமாட்டை கண்காணித்துள்ளனர். அதன்பின்னர், அன்றையதினம் இரவு வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது, பொலிஸார் அந்தப் பயங்கரவாதியை கைது செய்துள்ளனர்.
இன்றைக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் இந்த கைது இடம்பெற்றிருந்தாலும், அண்மையில்தான் தகவல்கள் வெளிவந்தன.
ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புடன் முரண்பாடு ஏற்பட்டமையால், தனது மனைவியுடன் மூன்று பிள்ளைகளையும் காஷ்மீரில் விட்டுவிட்டு, தலைமறைவாகிவிட்டர்.
அதன்பின்னர், பெங்களூரில் வேலைப்பார்த்துள்ளார். அப்போது பெண்ணொருவருடன் ஏற்பட்ட பழக்கத்தில் அவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவருக்கு 8 மாத குழந்தை உட்பட மூன்று குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
35 minute ago
47 minute ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
47 minute ago
9 hours ago
9 hours ago