Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 28 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் பகுதியில் நிலத்தடி பதுங்கு குழிகளை தயார் செய்து வருகின்றனர்.
இது ஏற்கெனவே இப்பகுதியில் நிலவிய நிச்சயமற்ற தன்மையை நினைவூட்டுவதாக உள்ளது. 'மோடி பதுங்கு குழிகள்' என பிரபலமாக அறியப்படும் இவற்றில் போர்வைகள் மற்றும் படுக்கைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
எல்லைக்கு அப்பால் இருந்து (பாகிஸ்தான்) நடத்தப்படும் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க, எல்லை கட்டுப்பாட்டுக்கோடு அருகே நிலத்தடியில் பதுங்கு குழிகள் கட்டப்பட்டுள்ளன. இவை “மோடி பதுங்கு குழிகள்” என அழைக்கப்படுகின்றன.
பூஞ்ச் மற்றும் ரஜவுரி உள்ளிட்ட அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் தனிநபர் மற்றும் சமூக பதுங்கு குழிகளை கட்ட நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை மத்திய அரசு வழங்கியது. பிரதமர் நரேந்திர மோடியின் 2ஆவது ஆட்சியின் போது இத்தகைய பதுங்கு குழிகள் அதிக அளவில் கட்டப்பட்டன.
ஜம்மு பிராந்தியத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு சுமார் 8,000 பதுங்கு குழிகள் கட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக ஜம்மு, கதுவா, சம்பா, பூஞ்ச் மற்றும் ரஜவுரி ஆகிய 5 மாவட்டங்களில் 14,460 பதுங்கு குழிகளை கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. பின்னர் ஆபத்து அதிகம் உள்ள அனைத்து பகுதிகளிலும் பதுங்கு குழிகளை கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago