2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பயிற்சி விமானம் அவசரமாக தரையிறக்கம்

Freelancer   / 2023 ஜூலை 13 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்டது. 8 பேர் அமரும் வசதி கொண்ட அந்த சிறிய ரக விமானத்தில் விமானிகள் 2 பேர் மட்டும் இருந்தனர்.

அவர்கள் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்டு சென்றனர். அப்போது விமானம் தரையிறங்குவதற்கு பயன்படும் முன்பக்க சக்கரப்பகுதியில் இயந்திர கோளாறு ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த விமானி உடனடியாக எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.   முன்னதாக விமான நிலைய ஓடுபாதையில், விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை விமான நிலைய ஊழியர்கள் மேற்கொண்டு இருந்தனர். இதையடுத்து விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X