Mithuna / 2024 பெப்ரவரி 21 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது திருமணத்திற்காக, பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட லட்சுமி நாராயணா (28) என்பவர் உயிரிழந்த பரிதாபம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெற இருந்த தனது திருமணத்திற்காக கடந்த 16-ம் திகதி தனது பற்களை ஒழுங்குபடுத்த பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் லட்சுமி நாராயணா.

பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சையின்போது நாராயணா மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் அவரின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே லட்சுமி நாராயணா உயிரிழந்துள்ளார்.
அதிக அளவில் மயக்க(Anesthesia) மருந்து அளித்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை புகார் அளித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .