Freelancer / 2025 ஏப்ரல் 28 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பல யூடியூப் சேனல்களை இந்திய அரசு இப்போது தடை செய்துள்ளது.
இதனுடன் பயங்கரவாதிகளை(Terrorists) தீவிரவாதிகள் (Militants) என்று குறிப்பிட்டதற்காக பிபிசி இடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அலைவரிசைகள் மீதான தடை குறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“இந்தியாவிற்கு எதிராக எரிச்சலூட்டும், வகுப்புவாத கருத்துக்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக பாகிஸ்தானிய யூடியூப் சேனல்கள் தடுக்கப்பட்டுள்ளன.
“பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட 16 யூடியூப் சேனல்களில் (முன்னலா கிரிக்கெட் வீரர்) சோயிப் அக்தரின் சேனல் மற்றும் அங்குள்ள பல முக்கிய ஊடக நிறுவனங்களின் யூடியூப் சேனல்களும் அடங்கும். டான் நியூஸ், சாமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், ரஃப்தார் டிவி, தி பாகிஸ்தான் ரெஃபரன்ஸ், ஜியோ நியூஸ், சாமா ஸ்போர்ட்ஸ் மற்றும் உசைர் கிரிக்கெட் ஆகியவை முடக்கப்பட்டன” என்று தெரிவித்தார்
முடக்கப்பட்ட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களில் ஒட்டுமொத்தமாக 63.08 மில்லியன் (6.3 கோடிக்கும்) மேலான folwers உள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
16 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
16 minute ago
23 minute ago