A.K.M. Ramzy / 2021 ஜனவரி 31 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி அனுப்பி வருவது பாஜகவின் வெற்றி என நடிகை குஷ்பு பேசினார்.
மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள அம்மா திடலில் பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு குஷ்பு தொடர்ந்து உரையாற்றுகையில் ;
பாஜக கடந்த 6 ஆண்டுகளாக என்ன செய்தது எனக் கேட்கின்றனர். கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்த ஒரு சாதனை போதாதா?. அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி அனுப்பி வருகிறோம். இது வெற்றி இல்லையா?எனக் கேள்வி கேட்டார்.
நெற்றியில் வைத்த குங்கு மத்தை அழித்த மு.க.ஸ்டாலின் இப்போது கையில் வேல் எடுத்துள்ளார். இது பாஜகவின் வெற்றியாகும்.
காங்கிரஸ் ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தனர். அப்போது ராகுல் என்ன செய்தார்? தமிழ் மக்கள் மீது ராகுலுக்கு திடீரென அக்கறை, பாசம் வந்துள்ளது.
திருக்குறள் கற்று வருவதாக ராகுல் கூறுகிறார். 1,330 குறட்பாக்களையும் ராகுலால் கற்க முடியாது. முதலில் தமிழை தெளிவாகக் கற்றுக் கொள்ளுங்கள் என்றார்.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026