2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிப்பதால் பெண்கள் கொல்லப்படுகின்றனர்

Editorial   / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கிய பின்னர், பெண்கள் கொலைசெய்யப்படுவது அதிகமாகியுள்ளது. நான் நாடு முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை கவனித்து கூறுகிறேன். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை செய்துவிட்டு, அதற்கு தடயங்கள் இருக்க கூடாது என அந்த பெண்களை கொன்று வரும் ஆபத்தான போக்கு நாட்டில் தொடர்ந்து வருகிறது” என காங்கிரஸ்  தலைவரும், ராஜஸ்தான் முதலமைச்சருமான அஷோக் கெலாட் தெரிவித்துள்ளார். இந்த கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார். தொடர்ந்து, “இந்த கருத்தை எவ்வளவு கண்டித்தாலும் அது குறைவாக தான் இருக்கும். நாடு முழுவதும் இன்று பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். பல சட்ட போராட்டத்திற்கு பிறகும், உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு பிறகும், இந்த சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதுபோலான கருத்துக்கள் பாதிக்கப்பட்டவரின் மன உறுதியை உடைக்கிறது. தலைவர்கள், பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும், இதுபோல் தேவையற்ற கருத்துக்களை வெளியிட கூடாது” என கூறினார்.

மேலும், “அஷோக் கெலாட் ஒரு பாலியல் குற்றவாளியை போல கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது” என விமர்சித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X