Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 13 , பி.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறலை தடுக்க முயன்ற போது கொடூர தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை கூறியதாவது, மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள டிடி நகர் பகுதியில் பெண் ஒருவர் தனது கணவருடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இந்த பெண்ணின் கணவர் ஹோட்டலுக்குள் சென்று பொருள்களை வாங்கிய நிலையில், பெண் வெளியே நின்றுள்ளார்.
அப்போது மூன்று இளைஞர்கள் அந்த பெண்ணின் அருகே வந்து அறுவறுப்பான வார்த்தைகள் கூறி, விசிலடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் இளைஞர் ஒருவரை ஆத்திரத்தில் அறைந்துள்ளார்.
இதையடுத்து, கோபமடைந்த மூவரும் அந்த பெண்ணை பேப்பர் கட்டர் வைத்து முகத்தில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். நிலைமை உணர்ந்து பெண்ணின் கணவரும், பொதுமக்களும் அங்கே வர குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
உடனடியாக பெண்ணை அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு முகத்தில் 118 தையல்கள் போட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறை ஹோட்டல் சிசிடிவி உதவியோடு குற்றவாளிகள் மூவரில் இருவரை கைது செய்துள்ளது. மூன்றாம் நபரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணை மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். அந்த பெண்ணுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துவிட்டு பெண்ணின் துணிச்சலைப் பாராட்டியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .