2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பா.ஜ.க- திரிணாமுல் காங்கிரஸ் மோதல்

A.K.M. Ramzy   / 2021 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அகர்தலா:

திரிபுரா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள இவ்வேளை,  பாரதிய ஜனதா கட்சிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், சுதந்திர தினத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டோலா சென், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றுவதற்காக திரிபுரா சென்றார்.

பெலோனியா நகர் அருகே அவர் காரில் சென்றபோது பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதில், தனது கார் சேதமடைந்து விட்டது என்றும், அவருடன் வந்த ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X