Editorial / 2025 ஜூலை 01 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருமணமாகி 78 நாளில் புதுமணப்பெண் தற்கொலை செய்துக்கொண்டுள்ள நிலையில், மாப்பிள்ளை, மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஆர்டிஓ விசாரணையும் நடைபெறுகிறது. இந்த சம்பவம், திருப்பூரில் இடம்பெற்றுள்ளது.
அவிநாசியில் புதுமணப்பெண் ரிதன்யா தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ பதிவுகள் அனுப்பிவிட்டு காரில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ மோகனசுந்தரம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா. இவர்களுக்கு மிதுன் ஆதித்யா என்ற மகனும், ரிதன்யா (27) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், ரிதன்யாவிற்கு திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணனின் மூத்த மகன் ஈஸ்வரமூர்த்தி - சித்திராதேவி தம்பதியரின் மகன் கவின் குமார் உடன், கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், திருமணமாகி 78 நாட்கள் ஆன நிலையில், புதுப்பெண் ரிதன்யா சேவூர் ரோட்டில் தனது காரில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், தற்கொலை செய்துக் கொள்ளும் முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோ பதிவில், “ மனரீதியாகவும், உடல் நீதியாகவும் கவின்குமார் கொடுமைகள் தாங்க முடியவில்லை. எனது, கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோர் சேர்ந்து சித்ரவதை செய்கின்றனர். இனி என்னால் இந்த வாழ்க்கையை வாழ முடியாது. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா” என குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து, ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கூறுகையில், “என்னிடம் சொல்ல முடியாத அளவுக்கு என் மகளுக்கு தொந்தரவு அளித்துள்ளனர். ஏன் மகளை இழந்துட்டேன். நன்றாக விசாரித்து தான் மகளை கொடுத்தோம். என் மகள் வந்து என்னிடம் கூறும்போது நான் நம்பவில்லை. அவர்கள் சொல்வதைதான் கேட்க வேண்டும் என மன நீதியாக தொந்தரவு கொடுத்துள்ளனர்.
கவின்குமார் உடல் நீதியாக கொடுமை படுத்தியுள்ளார். தக்களது மகள் போல் பார்த்துக்கொள்கிறோம் எனக்கூறி அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, பணம், நகை கேட்டும் தொந்தரவு அளித்துள்ளனர். படுக்கை அறையில் வேறு மாதிரி எனது மகன் எதிர்பார்க்கிறான் என்று மாமனார் பேசியுள்ளார்” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் தாய் ஜெயசுதா பேசுகையில், “விளையாட்டுக்கு கேட்பது போன்று தொழில் வைத்து தருமாறு கேட்டனர். எனது கணவரும் தொழில் வைத்து தருவதாக நினைத்தார். கை, கால்களை கட்டிவைத்து பல்வேறு வகைகளில் உடல் நீதியாக தொந்தரவு அளித்துள்ளார். மேலும், நகை கேட்டும் தொந்தரவு செய்துள்ளனர். அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அப்போது தான் எனது மகள் ஆத்மா சாந்தியடையும்” என கண்ணீருடன் தெரிவித்தார்.
46 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
58 minute ago
1 hours ago