A.K.M. Ramzy / 2021 ஜனவரி 25 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி:
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு மகனிடம் வலியுறுத்தும்படி பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென்னுக்கு பஞ்சாப் விவசாயி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பஞ்சாப் விவசாயி ஹர்பீந்தர் சிங் என்ற விவசாயி எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:
'கனமான இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுது கிறேன். வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, உணவளிக்கும் விவசாயிகள் டெல்லி சாலையில் கடும் குளிரில் தூங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்படி, தங்கள் மகனிடம் நீங்கள் வலியுறுத்த வேண்டும்.
நீங்கள் கூறினால் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை அவர் திரும்பப் பெறுவார் என்று நான் நினைக்கிறேன்,
ஒரு நபர், தனது தாயைத் தவிர, வேறு யாரின் வார்த்தையையும் மறுக்க முடியும். ஏனெனில் நம் நாட்டில் தாய் ஒரு கடவுளாகக் கருதப்படுகிறார். உங்கள் மகன் (பிரதமர் மோடி) உங்கள் கோரிக்கையை ஒருபோதும் மறுக்க மாட்டார்.
உங்கள் மகன் உங்கள் பேச்சைக் கேட்டு இந்த கறுப்புச் சட்டங்களை ரத்து செய்வார் என்று நான் நம்புகிறேன்.
முழு நாடும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும். ஒரு தாய் மட்டுமே தன் மகனின் காதைப் பிடித்து இழுத்து உத்தரவு போடலாம். இந்த மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட்டால், அது முழு நாட்டிற்கும் கிடைத்த வெற்றியாக கருதப்படும், இதில் யாருக்கும் தோல்வியில்லை என தெரிவித்துள்ளார்.
56 minute ago
2 hours ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
3 hours ago
9 hours ago