2025 ஜூலை 30, புதன்கிழமை

பிரதமர் மோடியை வரவேற்ற திபெத்திய கலைஞர்கள்

Freelancer   / 2022 ஜூன் 20 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கேசிசிபி சௌக்கில் இருந்து தர்மசாலாவில் உள்ள அரச தியாகிகள் நினைவிடம் வரை பிரதமர் நரேந்திர மோடிக்கு இமாச்சலப் பிரதேச மக்கள் பிரமாண்ட வரவேற்பளித்தனர்.

திபெத்தின் ஆற்றுகைக் கலை நிறுவகத்தின் கலைஞர்கள் பாரம்பரிய தஷி ஷோபா நடனமாடி, பிரதமர் மோடியை வரவேற்றனர். 

தர்மசாலாவுக்கு விஜயம் செய்த பிரதமர் மோடி, தர்மசாலாவில் கடந்த வியாழன் (16) மற்றும் வெள்ளி (17) இடம்பெற்ற தலைமைச் செயலாளர்களின் முதல் தேசிய மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.

பிரதமர் மோடியின் தர்மசாலா விஜயத்தில் அவரை வரவேற்க நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்ததுடன், நூற்றுக்கணக்கான திபெத்தியர்கள் மோடியை வரவேற்கவும், கண்காட்சியில் பங்கேற்கவும் குவிந்திருந்தனர்.
 
பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் பயணத்துக்கான ஏற்பாடுகளை இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், புதன்கிழமை (15) ஆய்வு செய்தார்.

இந்த மாநாட்டுக்கு நெறிமுறைகளின்படி முறையான ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதலமைச்சர், மாநாடு நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது, நகர்ப்புற நிர்வாகம், பயிர் மாற்றம் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகை உணவுப் பொருட்களில் தன்னிறைவை அடைதல், தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பாடசாலை மற்றும் உயர்கல்வி நிலையங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .