A.K.M. Ramzy / 2021 மார்ச் 30 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நந்திகிராம்:
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பர்பா மேதினிபூர் மாவட்டத்தின் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மம்தாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சுவேந்து அதிகாரியே, மம்தாவை எதிர்த்து பா.ஜனதா சார்பில் அங்கே களமிறக்கப்பட்டு உள்ளார். இந்த தேர்தலில் மம்தாவுக்கு சுவேந்து அதிகாரி கடும் போட்டி அளித்து வருகிறார்.
ஆனால் இந்த தொகுதியில் வெல்வது தனது கௌரவ பிரச்சினையாக பார்க்கும் மம்தா பானர்ஜி, எப்படியாவது நந்திகிராமில் வெற்றிக்கனியை பறிக்க போராடி வருகிறார். இதற்காக பல்வேறு கட்ட பிரசாரங்களில் ஈடுபட்டு இருக்கும் அவர், அதன் தொடர்ச்சியாக நேற்று பிரமாண்ட பேரணி ஒன்றையும் நடத்தினார்.
ரியாபரா குதிராம் என்ற பகுதியில் இருந்து தாகூர்சவுக் வரை 8 கி.மீ. தொலைவுக்கு இந்த பேரணி நடந்தது. சக்கர நாற்காலியில் அமர்ந்து பேரணிக்கு தலைமை தாங்கி சென்ற மம்தா பானர்ஜி, வழிநெடுகிலும் மக்களிடம் இருகரம் கூப்பி ஆதரவு கோரினார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago