A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
டில்லி:
விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயி குடும்பத்தாரை சந்திக்க சென்ற காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்காவுடன் சென்ற பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தானது.
டில்லியில் குடியரசு தினத்தன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில், உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த நவ்ரீத் சிங் என்ற விவசாயி சென்ற டிராக்டர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். விவசாயியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் வகையில் பொதுச்செயலாளர் பிரியங்கா, ராம்பூருக்கு பயணம் மேற்கொண்டார்.
அப்போது, அவரது வாகனத்தின் பின்னே பொலிஸார், கட்சி நிர்வாகிகள் வாகனம் அணிவகுத்துச் சென்றன. ஹாபூர் சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
1 hours ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
8 hours ago