R.Tharaniya / 2025 நவம்பர் 20 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பீஹார் முதல்வராக 10ஆவது முறையாக வியாழக்கிழமை (20) அன்று பதவியேற்றுள்ளார்.
பீஹாரில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, 202 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ.க. 89, ஐக்கிய ஜனதா தளம் 85, லோக் ஜனசக்தி ராம் விலாஸ் பஸ்வான் கட்சி 19, ஹிந்துஸ் தானி அவாம் மோர்ச்சா 5, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களை பிடித்தன.
என்.டி.ஏ. எனப்படும் தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய எம்.எல்.ஏக்கள் பங்கேற்ற கூட்டம் பாட்னாவில் நடந்தது. இதில் தற்போதைய முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் தே.ஜ. கூட்டணி எம்.எல்.ஏக்கள் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இதையடுத்து, பீஹார் முதல்வராக, 10ஆவது முறையாக இன்று (நவ.,20) நிதிஷ் குமார் பதவியேற்றுள்ளார். ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
துணை முதல்வராக பாஜவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் பதவியேற்றனர். சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வரலாறு காணாத வெற்றிக்கு, பீஹார் மாநில மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமார், தேஜ கூட்டணி தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
காந்தி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
7 hours ago
22 Nov 2025
22 Nov 2025
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
22 Nov 2025
22 Nov 2025
22 Nov 2025