A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுச்சேரி
புதுச்சேரியில் அடுத்து நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்று, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமித் ஷா தேர்தல் கூட்டணி மற்றும் பிரசாரத்துக்காகவும் ஒருநாள் பயணமாக நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். இன்று காலை புதுச்சேரி புறப்பட்டுச் சென்ற அமித் ஷா, காரைக்காலில் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
காரைக்காலில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
''என்னுடைய அரசியல் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும்.புதுச்சேரி மண் மிகவும் புனிதமானது. மகாகவி பாரதியார் நீண்டகாலமாக இங்குதான் இருந்தார். அரவிந்தர் இங்குதான் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கி, எதிர்கால வாழ்க்கையையும் தொடங்கினார்.
பிரதமராக மோடி வந்தபின், நாடு முழுவதற்கும் புதுச்சேரியை மாதிரி மாநிலமாக மாற்ற வேண்டும் என விரும்பினார். ஆனால், எங்களால்தான் புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ந்தது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏராளமான பெரிய தலைவர்கள் பாஜகவில் சேர்ந்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி சிதைந்து வருகிறது. புதுச்சேரியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சிதைந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் வாரிசு அரசியல் முறைதான் என்றார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago