Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 04 , பி.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாகன விபத்தில் உயிரிழந்த நபரின் உடலை, 18 நாட்களுக்குப் பிறகு தோண்டி எடுத்து வேறொரு இடத்தில் அடக்கம் செய்யும் சகோதரரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் கிராத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ்டஸ் (60), இவர் கடந்த மே 12 ஆம் தேதி மார்த்தாண்டம் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக வாகன விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த மே 16ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உடல் அவரது தாய் தந்தையர் கல்லறைத் தோட்டத்தின் அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அவரது சகோதரர் கிறிஸ்டோபர் என்பவர் தனது மனைவி மற்றும் ஒரு சிலரோடு வந்து ஜெஸ்டஸின் உடல் தோண்டி எடுத்து வேறோரு இடத்தில் அடக்கம் செய்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
மேலும், இது சம்பந்தமாக அவரது மகன் ஜெஸ்வின் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
30 minute ago
1 hours ago
1 hours ago
29 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
1 hours ago
29 Jul 2025