A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
சென்னையில் நாளையிரவு புத்தாண்டு கொண்டாட்டங்களை மேற்கொள்ள பொலிஸார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அதன்படி, சென்னையிலுள்ள அனைத்து நட்சத்திர ஹோட்டல்களில் இருக்கும் மதுபான விடுதிகளை டிசம்பர் 31ஆம் திகதி இரவு 10 மணியுடன் மூட சென்னை பொலிஸ் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சென்னையிலுள்ள அனைத்து உணவகங்களும் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட அனுமதியில்லை என்றும், சென்னை மெரீனா கடற்கரை சாலை உள்ளிட்ட அனைத்து கடற்கரை சாலைகளும் இரவு 10 மணிக்கு மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னையிலுள்ள மேம்பாலங்கள் அனைத்தும் நள்ளிரவில் மூடப்படும்.
சென்னை மாநகரத்தில் சுமார் 300 சோதனைச் சாவடிகள் அமைத்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
34 minute ago
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
4 hours ago
07 Mar 2026