A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருவனந்தபுரம்
கேரள மீன்வள மற்றும் பெருங்கடல் பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகே பனங்காடு கிராமத்தில் உள்ள புல்வெளியில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கியது. தரையில் மோதியபடி தரையிறங்கியதால் ஹெலிகாப்டரிலிருந்த விமானி மற்றும் அதில் பயணித்த என்.ஆர்.ஐ தொழிலதிபர் யூசுப் அலி ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் கொச்சி கும்பளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் ஹெலிகாப்டரிலிருந்த ஐவர் காயமின்றி உயிர்தப்பினர்.
லூலு குரூப் நிறுவன தலைவர் யூசுப் அலி மற்றும் அவரது மனைவி மற்றும் விமானி உள்ளிட்ட 7 பேர் அந்த ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர். கேரள மீன்வள மற்றும் பெருங்கடல் பல்கலைக்கழக மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்க வேண்டும். ஆனால், திடீரென ஹெலிகாப்டரின் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால், நெடுஞ்சாலையை யொட்டிய பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து நிகழ்ந்தபோது அப்பகுதியில் கடுமையான காற்றுடன் மழை பெய்ததாக அப்பகுதி மக்கள் கூறினர்.
17 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago