2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பெண்ணை காலால் மிதித்து படுகொலை

Freelancer   / 2023 ஓகஸ்ட் 08 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உதய்பூர் மாவட்டம் கொகுண்டா (Gogunda) அருகே உள்ள மலை கிராமத்தில் 85 வயது பெண்மணியை 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார். தலைமுடியை பிடித்து தரதரவென்று இழுத்து கொடுமைப்படுத்தியதுடன், அங்குள்ள மகாதேவன் கோயிலில் வைத்து பெண்மணியை காலால் மிதித்துள்ளார்.

வலி தாங்க முடியாமல் கதறிய பெண்மணி சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெண்மணியை கொடூரமாக தாக்கிய பிரதாப் சிங் என்பவரை பொலிஸார் கைதுசெய்தனர்.

மேலும் இரு சிறுவர்கள் உட்பட 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். விசாரணையின் போது பிரதாப் சிங் தன்னை சிவபெருமானின் அவதாரம் என்றும், உயிரிழந்த பெண்மணியை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்வேன் என்றும் கூறி காவல்துறையினருக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X