Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜூன் 26 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பள்ளிக்கு தாமதமாக வந்த காரணத்திற்காக ஆசிரியை ஒருவர் செருப்பால் தாக்கப்பட்ட அதிர்ச்சிக்குரிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியைச் சேர்ந்த பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பள்ளியின் முதல்வர் அஜித் வர்மா, தாமதமாக வந்ததற்காக பெண் ஆசிரியரை திட்டி அவருக்கு வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் (பாடசாலைக்கு வருகைதரவில்லை) என போட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பெண் ஆசிரியருக்கும் முதல்வருக்கும் காரசார விவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் கோபம் அதிகமான நிலையில், பெண் ஆசிரியரை அந்த பள்ளியின் முதல்வர் அஜித் செருப்பால் அடித்து தாக்கியுள்ளார். இதன் வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .