2025 ஜூலை 19, சனிக்கிழமை

பெப்ரவரி 30ஐ கண்டு கொந்தளித்த பெற்றோர்

Freelancer   / 2023 ஜூலை 20 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை ஆவணங்களில் நம்முடைய பெயர் எழுத்துக்கள் பிழையாக இருக்கக்கூடும், சில சமயம் பெயரின்  பிறந்த திகதியோ அல்லது வருடமோ முன்பின் மாறியிருக்கக் கூடும்.  ஆனால் பீகார் பாடசாலை ஒன்றில், நாட்காட்டியில்  இல்லாத திகதியை பிடித்து மாணவனின் பிறந்த திகதியாக ​மாணவனின் ஆவணமொன்றில் பதிவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

மாணவனின் பிறந்த திகதியை பெப்ரவரி 30 என  ஆவணத்தில் பதிவிட்டு கொடுத்துள்ள இந்த சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு இடமாற்றச் சான்றிதழ் அளிக்கப்பட்டது, அதில் அமன் குமாரின் பிறந்த திகதி 30 பிப்ரவரி 2009 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மொத்தமே 28 அல்லது 29 நாட்கள் தான் வரக்கூடும், ஆனால் நாட்காட்டியில் இல்லாத ஒரு திகதியை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், கடும் கொந்தளிப்பில் அவரது பெற்றோர் இருக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X