2026 மார்ச் 07, சனிக்கிழமை

பெரும்பான்மை வெற்றி பாஜகவுக்கே கிடைக்கும்

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 29 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மையான வெற்றி கிடைக்கும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

இதுகுறித்து நேற்று முன்தினம் அவர் கூறியதாவது

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிரானஅலை வீசுகிறது. அங்கு பாஜகவுக்கு நிச்சயம் பெரும்பான்மையான வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமல்லாமல் அசாமிலும் பாஜக தனதுஆட்சியைத் தக்க வைக்கும்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் அதிகஅளவு வாக்குகள் பதிவாகி உள்ளன. இதன்மூலம் பாஜவுக்கு தேர்தலில் வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம். தேர்தல் ஆணையம் செய்திருந்த சிறப்பான ஏற்பாடுகளால் ஏராளமான மக்கள் திரளாகவந்து வாக்களித்தனர்.

கேரளாவில் பாஜகவின் வாக்குசதவீதம் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் கூடுதல் இடங்களையும் அங்கு நாங்கள் வெல்வோம். அங்குமாற்றுக்கட்சியாக பாஜகவை மக்கள் பார்க்கிறார்கள்.

பாஜக எப்போதும் சமூகத்தைப் பிரித்தாளும் அரசியலை செய்ததில்லை. சாதி, மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் அரசியல் செய்யவில்லை. நீதி, மனிதத் தன்மை ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே அரசியல் செய்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .