2025 மே 01, வியாழக்கிழமை

பெற்​றோர் விருப்​பத்தை மீறி திரு​மணம் செய்​வோருக்கு பாது​காப்பு கோர முடி​யாது

Freelancer   / 2025 ஏப்ரல் 18 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள், தங்கள் உயிருக்கும் சுதந்திரத்திற்கும் உண்மையான அச்சுறுத்தல் இல்லாத வரை, பொலிஸ் பாதுகாப்பை உரிமையாகக் கோர முடியாது என்று, அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெற்றோர் விருப்பத்துக்கு எதிராக திருமணம் செய்த தம்பதியினர் போலீஸ் பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த போதே, அலகாபாத் உயர் நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.

“தகுதியான வழக்கில் ஒரு தம்பதியினருக்கு நீதிமன்றம் பாதுகாப்பு வழங்க முடியும். ஆனால், எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத நிலையில், அத்தகைய தம்பதியினர் ஒருவொருக்கொருவர் ஆதரவளிக்கவும், சமூகத்தை எதிர்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றும், அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .