Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 மே 24 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் பேனா சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மெரினா கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக 81 கோடி இந்திய ரூபாய் செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
எனினும் பேனா சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, அ.தி.மு.க மற்றும் மீனவர்கள் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவரும் இதற்கு எதிராக புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்பதால், மெரினா கடலில் பேனா சிலை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், நாடு முழுவதும் கடல் அரிப்பை தடுக்கும் விதமாக கடற்கரை அருகே மரங்களை நட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடலில் பேனா சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவ சங்கங்கள் சார்பில் தொடரப்பட்ட மனு விசாரணைக்காக நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது
26 minute ago
29 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
29 minute ago
53 minute ago