A.K.M. Ramzy / 2021 ஜனவரி 31 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி:
விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் காயமடைந்த டில்லி பொலிஸார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.
வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினர்.
இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. இதனை தடுக்க முயன்ற போது, போராட்டக்காரர்கள், கத்தி மற்றும் கம்புகளை கொண்டு பொலிஸாரை கடுமையாக தாக்கினர். இதில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், டில்லி பொலிஸார், ஓய்வு பெற்ற பொலிஸார், காயமடைந்தபொலிஸாரின் குடும்பத்தினர் இணைந்து டில்லியில் ஷாகீதி பூங்காவில் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தலைமை காவலர் அசோக் குமார் கூறுகையில், செங்கோட்டையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன். நுழைவு வாயிலில் பணியில் இருந்த போது, செங்கோட்டையில் கொடியேற்றியவர்களை, வெளியேற்ற முயன்றோம்.
அப்போது அவர்கள் எங்களை தாக்கினர். கத்தி மற்றும் கம்புகளை கொண்டு தாக்கினர். இதில், தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago