A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 06 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையில் முதல்வர் பழனிசாமி நாடகம் நடத்துவதாகவும், அவரது முகமூடி கழன்று கீழே விழுந்து விட்டதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது; பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் தி.மு.க அரசியல் நாடகம் நடத்துகிறது என்று சட்டசபையில் கூறி 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் ஏழு பேரின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தியிருப்பதுடன், மெகா பொய்யையும் அவிழ்த்து விட்டிருக்கும் முதல்வர் பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஏழு பேரின் வழக்கில், முதன் முதலில் நளினியின் தூக்குத் தண்டனையை ரத்து செய்தவர் கருணாநிதி. அதுவும் மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தியே செய்தார்.
பிறகு 2014 லோக்சபா தேர்தல், 2016 சட்டசபை தேர்தல்களின்போது ஏழு பேரின் விடுதலை தொடர்பாக ஜெயலலிதா தீர்மானம் கொண்டுவருவது போல் நாடகம் நடத்தினார். முதல்வர் பழனிசாமியும் 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னபாக 2018இல் விடுதலை செய்ய தீர்மானித்தார். தேர்தல் முடிந்ததும், வழக்கம் போல அதை அப்படியே மறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் அது பற்றி சிறிதும் கவலைப்படவில்லை.
இப்போது 2021 சட்டமன்றத் தேர்தல் வருகின்ற நேரத்தில்தான், மீண்டும் இந்த ஏழு பேரின் விடுதலை முதல்வரின் நினைவுக்கு வந்திருக்கிறது. ஜனவரி 25ஆம் திகதியே தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்து, “எனக்கு அதிகாரம் இல்லை” என்று கூறிய பிறகு - ஜனவரி 29ஆம் திகதி அவரைச் சந்தித்து “ஏழு பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளியுங்கள்” எனக் கடிதம் கொடுத்ததாகக் கூறியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி.
இதுதான் முதல்வர் பழனிசாமி இந்த ஏழு பேர் விடுதலையில் தொடர்ச்சியாக நடத்தும் நாடகம். ஏழு பேர் விடுதலையிலும் தேர்தலுக்குத் தேர்தல் நாடகம் போடுவதை - வேடம் கட்டுவதை முதலில் கைவிடுங்கள்! என்றார்.
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026