Editorial / 2023 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பல நவீன நிலையங்கள் கட்டப்படும் போது, அது ஒரு புதிய சூழலையும் உருவாக்கும். ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி இந்த நவீன நிலையங்களிலிருந்து இந்த நகரங்களை அடையும்போது, அந்த நகரத்தின் தோற்றம் அவர் கண்களில் மறக்கமுடியாததாக மாறும். இது பொருளாதார நடவடிக்கைகளுக்கும் ஊக்கமளிக்கும். அந்த வகையில்தான் அம்ரீத் பாரத் ரயில் நிலைய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்ரீத் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரூ.716.84 கோடி மதிப்பில், 104 கருத்துருக்களுக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
நாட்டின் பெரிய, சிறிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அம்ரீத் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், நாட்டில் 1,275 ரயில் நிலையங்களை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் உள்ள சென்னை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட 6 கோட்டங்களில் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு நடத்தி, விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்க ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டது. மேலும், ரயில் நிலையங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ.881.42 கோடி மதிப்பில், 125 கருத்துருக்கள் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில், ரயில் நிலையங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ரூ 716.84 கோடி மதிப்பில், 104 கருத்துருக்களுக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல, தெற்கு ரயில்வேயில் 90 நிலையங்களை ஆய்வு செய்யும் பணிகளுக்காக ரூ.11.22 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: அம்ரீத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ், சென்னை கிண்டி, அரக்கோணம், ஈரோடு, கரூர், கோவை வடக்கு, தஞ்சாவூர், தென்காசி, நாகர்கோவில் சந்திப்பு உள்ளிட்ட 60 நிலையங்கள், கேரளாவில் சொரனூர், தலைசேரி, குட்டிப்புரம் உள்பட 26 நிலையங்கள், புதுச்சேரியில் மாஹி, காரைக்கால் ஆகிய 2 நிலையங்கள், கர்நாடகாவில் மங்களூர், ஆந்திராவில் சூலூர்பேட்டை நிலையம் என மொத்தம் 90 நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடும் ஆலோனைக் குழுவுக்கு ரூ.11.22 கோடியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இக்குழு ரயில் நிலையங்களில் ஆய்வு செய்து, பயணிகளின் தேவை, எண்ணிக்கை, இணைப்பு வாகன வசதி உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
மொத்தம் 90 நிலையங்கள் மேம்படுத்துவதற்காக, 150 பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ரூ.881.42 கோடி மதிப்பில், 126 கருத்துருக்கள் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் ரூ 716.84 கோடி மதிப்பில், 104 கருத்துருக்களுக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த திட்டத்தில், பயணிகள் காத்திருப்போர் அறைகள் மேம்படுத்தப்படும். ரயில் நிலையத்தில் சிற்றுண்டிக்கடைகள் அல்லது சிறிய கடைகள் அமைக்கப்படும். ஒரு ரயில் நிலையத்தில், "ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு" திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 கடைகள் திறக்கப்படும். ரயில் நிலையத்தின்முக்கிய இடங்களில் ரயில் வருகை,புறப்பாடு உள்ளிட்ட விவரங்களைக் காட்சிப்படுத்தும் பலகைகள் பொருத்தப்படும். மேலும், பயணிகளைக் கவரும் வகையில் இயற்கை காட்சிகள், செடிகள், மரக் கன்றுகள் உருவாக்கப்படும். அனைத்துப் பகுதிகளிலும் 600 மீட்டர் நீளம் கொண்ட, உயர்நிலை நடைமேடை அமைக்கப்படும்.
அடிப்படை வசதிகள் மேம்பாடு: இதில், ரயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவுவாயில்கள் சீரமைப்பு, மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள், மல்டி லெவல் பார்க்கிங் வசதி, சிசிடிவி கேமரா, வை ஃபை வசதி, இயற்கைக் காட்சிகள், தோட்டம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும்.
தமிழகத்தில் முதல்கட்டமாக, செங்கல்பட்டு (ரூ.18 கோடி), பெரம்பூர் (ரூ.15 கோடி), கூடுவாஞ்சேரி (ரூ.21 கோடி), திருவள்ளூர் (ரூ.16 கோடி), திருத்தணி (ரூ.11 கோடி), கும்மிடிப்பூண்டி (ரூ.17 கோடி), அரக்கோணம் (ரூ.22 கோடி), ஜோலார்பேட்டை (ரூ.16 கோடி),
சேலம் (ரூ.45 கோடி), கரூர் (ரூ.34 கோடி), திருப்பூர் (ரூ.22 கோடி), போத்தனுார் (ரூ.24 கோடி),தென்காசி (ரூ.17 கோடி), விருதுநகர்(ரூ.25 கோடி), மயிலாடுதுறை (ரூ.20 கோடி), தஞ்சாவூர்(ரூ.23 கோடி), விழுப்புரம் (ரூ.24 கோடி), நாகர்கோவில் (ரூ.11 கோடி) ஆகிய 18 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பெரம்பூரில் விழா...: அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ், சென்னை ரயில்வே கோட்டத்தில் பெரம்பூர் உள்ளிட்ட 8 நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, அந்தந்த ரயில் நிலையங்களில் நேற்று நடைபெற்றன. பெரம்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நவீன ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதாவது: நாட்டில் நவீன ரயில்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் நல்ல இருக்கைகள் காணப்படுவதாக பிரதமர் மோடி கூறினார். நிலையங்களில் நல்ல காத்திருப்பு அறைகள் உருவாக்கப்படுகின்றன. நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி உள்ளது. இந்த இலவச இணையத்தை பல இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டது தெரியவந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். இதனால் இளைஞர்கள் நன்றாக படித்து நிறைய முன்னேறியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ரயிலில் இருந்து ரயில் நிலையம் வரை மக்களுக்கு சிறந்த மற்றும் சிறந்த அனுபவத்தை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். ரயில் பயணத்தை ஒவ்வொரு குடிமகனும், பயணிகளும் அணுகக்கூடியதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் மாற்றுவதை நாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
நகரங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்
நாட்டின் உயிர்நாடியாக ரயில்வே அழைக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறினார். நகரங்களின் அடையாளமும் ரயில் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. நகரங்களின் அனைத்து நடவடிக்கைகளும் ரயில் நிலையங்களைச் சுற்றியே நடைபெறுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், ரயில் நிலையங்களை நவீன வடிவில் வடிவமைக்க வேண்டியது அவசியம். நாட்டில் பல நவீன நிலையங்கள் கட்டப்படும் போது, அது ஒரு புதிய சூழலையும் உருவாக்கும். ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி இந்த நவீன நிலையங்களிலிருந்து இந்த நகரங்களை அடையும்போது, அந்த நகரத்தின் தோற்றம் அவர் கண்களில் மறக்கமுடியாததாக மாறும். இது பொருளாதார நடவடிக்கைகளுக்கும் ஊக்கமளிக்கும்.
3 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
3 hours ago
5 hours ago