A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 25 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை,
மக்கள் நீதி மய்யத்தின் பொது செயலாளராக இருந்த அருணாச்சலம் சென்னையில் உள்ள கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இன்று இணைந்தார்.
பாஜகவில் இணைந்த பின்னர் அவர் கூறியதாவது:-“தொலைநோக்கு சிந்தனையுடன் வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஒரு விவசாயிக்கு இது பயனுள்ள திட்டமாகும். புதிய வேளாண் சட்டங்களை மக்கள் நீதி மய்யம் ஆதரிக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளேன்.
விவசாயிகள் நலன் கருதி பாஜகவில் இணைந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியது முதலே அக்கட்சியில் அருணாச்சலம் பொறுப்பு வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
6 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
07 Mar 2026