2021 ஜூலை 31, சனிக்கிழமை

மீண்டும் சிறைக்கு வந்தார் பேரறிவாளன்

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தழிழகம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனின் இரண்டு மாத பரோல் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 28 ஆண்டுகளாக சிறையிலுள்ள பேரறிவாளன் அவரது தந்தையின் உடல்நலக் குறைவு

காரணமாகவும், சகோதரியின் மகள் திருமணத்துக்காகவும் அவரது தாயார் அற்புதம்மாள் அளித்த கோரிக்கை மனுவின் பேரில், அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த நவம்பா் 12ஆம் திகதி புழல் சிறையில் இருந்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு அழைத்து வரப்பட்டார். 

பரோல் முடிந்து கடந்த டிசம்பா் 13ஆம் திகதி பேரறிவாளன் புழல் சிறைக்கு செல்ல இருந்த நிலையில், அவரது தாயார் அற்புதம்மாள் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

அதன்பேரில் தமிழக அரசு மீண்டும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் 2 மாத பரோல் முடிந்து பேரறிவாளன் இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .