2025 ஜூலை 30, புதன்கிழமை

மணமகணுக்கு டாட்டா காட்டிய மணப்பெண்!

Freelancer   / 2022 மே 25 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த மணமகளுக்கும் எஸ்.பி.கோட்டையை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

சரியாக தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திடீரென்று எழுந்து திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

முன்பே பொலிஸாருக்கு மணப்பெண் தகவல் கொடுத்ததன் பேரில் திருமண மண்டபத்துக்கு வந்த பொலிஸார் மணப்பெண்ணை அழைத்து சென்றனர். 

அயல் வீட்டு இளைஞரை காதலித்து வந்த நிலையில்,  பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் அறிவுரைபடி திருமண நேரத்தில் அவர் திருமணத்தை நிறுத்தியது தெரியவந்தது. 

ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார் திருமண நிகழ்ச்சிக்காக செலவு செய்த 5 இலட்ச ரூபாயைக் கொடுக்குமாறு பெண் வீட்டாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் திருமண மண்டபம் போர்களமானமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .