2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மணிப்பூரில் அட்டகாசம் இன்னுமே ஓயவில்லை

Freelancer   / 2023 ஜூலை 23 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணிப்பூரில் கடந்த மே-3 ஆம் திகதி நடந்த பழங்குடியின ஒற்றுமை யாத்திரையில் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேல் நடைபெற்ற இனக்கலவரத்தில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக புகார்கள் கொடுக்கப்பட்டும், பொலிஸார் நடவடிக்கை எடுக்காதது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டத்தில் கடந்த மே 4ஆம் திகதி பழங்குடியின பெண்கள் இருவரை, மைத்தேயி இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் சில நாட்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை மணிப்பூர் பொலிஸார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இது போல் மணிப்பூரில் மே 3-ம் திகதிக்குப் பின் பல கொடூர சம்பவங்கள் நடைபெற்றது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. தலைநகர் இம்பாலில் கடந்த மே 4-ம் திகதி அன்று மற்றொரு கொடூர சம்பவமும் நடைபெற்றது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கார் சுத்தம் செய்யும் கடை ஒன்றில் குகி இனத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள் பணியாற்றியுள்ளனர்.

இவர்களில் ஒருவருக்கு வயது 24, அவரது தங்கைக்கு வயது 21. இருவரும் இம்பால் நகரில் மைத்தேயி மக்கள் அதிகம் வசிக்கும் கோன்வுங் மனாக் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது வீட்டுக்கு கடந்த மே 4-ம் திகதி அன்று மைத்தேயி இனத்தவர்கள் கும்பலாக புகுந்து பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அவர்களை கொலை செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X