A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, மதிமுக சார்பில் நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதனை அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் திகதி நடைபெறுகிறது. கன்னியாகுமரி மக்களவை இடைத் தேர்தலும் அதே திகதியில் நடைபெறவுள்ளது. இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் இறங்கிவிட்டன. கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை வேகம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்து தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு அளிப்பது குறித்த பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியுள்ளது. இதற்காக டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு குழுவை திமுக அமைத்து ள்ளது. காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியுள்ளது. முதல் சுற்றுப்பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, மதிமுக சார்பில் நான்கு பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நியமித்துள்ளார்.
மதிமுக பேச்சுவார்த்தைக் குழுவில் உள்ள 4 பேர்:
1. மல்லை சி.ஏ. சத்யா,(மதிமுக துணைப் பொதுச்செயலாளர்) 2. மு.செந்திலதிபன்( மதிமுக ஆய்வு மையச் செயலாளர்)
3. வழக்குரைஞர் கு.சின்னப்பா(மதிமுக உயர்நிலைக்குழு உறுப்பினர்)4. ஆவடி அந்திரிதாஸ்(மதிமுக தேர்தல் பணிச் செயலாளர்)
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago