2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

மதுரையில் த.வெ.க மாநில மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 13 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரையில் ஓகஸ்ட் 21ஆம் திகதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொண்டர்களுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் கட்சி நிர்வாகிகள் உறுதியளித்துள்ளனர்.

மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு செய்யப்பட்ட வசதிகள் குறித்து மதுரை மாவட்ட பொலிஸ் 42 கேள்விகளை எழுப்பி விளக்கம் கோரியது. இதற்கான விளக்கங்களை கட்சி நிர்வாகிகள் அளித்துள்ளனர்.

மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளர் கல்லாணை கருத்துத் தெரிவிக்கையில், கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் ஆலோசனையின் பேரில் மாநாட்டு ஏற்பாடுகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளன. மாநாடு குறித்த ஓட்டோ பிரசாரம் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம். ஓரிரு நாளில் பொலிஸாரின் முறையான அனுமதி கிடைத்துவிடும் என்று கூறினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X