Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிரியையொருவர் தன்னிடம் கல்வி கற்கும் மாணவனை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், திருச்சூர் அருகேயுள்ள ஒரு தனியார் பாடசாலையொன்றில் கல்வி கற்றுவரும் 10 ஆம் தரத்தைச் சேர்ந்த மாணவனொருவனே இவ்வாறு தனது ஆசிரியையால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக குறித்த மாணவனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானித்த அப்பாடசாலை ஆசிரியர்கள் சிலர், அம் மாணவனுக்கு கவுன்சிலிங் வழங்க முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து அம்மாணவனுக்கு நடத்தப்பட்ட கவுன்சிலிங்கில் ” அம் மாணவன் தான் மேலதிக வகுப்பு ஆசிரியையொருவரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தன்னை மது அருந்த வைத்து பலாத்காரம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், இது குறித்து உடனடியாகப் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் குறித்த ஆசிரியையிடம் மேற்கொண்ட விசாரணையில் ” அவர் தான் குற்றம் புரிந்ததை ஒப்புக் கொண்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரை பொலிஸார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .