2024 மே 18, சனிக்கிழமை

மின்னுயர்த்தி அறுந்து விபத்து : மீட்பு பணி தீவிரம்

Mayu   / 2024 மே 15 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் ராஜஸ்தான் பகுதியில் சுமார் 2000 அடி ஆழத்தில் உள்ள சுரங்கத்தில் மின்னுயர்த்தி  (லிஃப்ட்) அறுந்து விழுந்ததால், அதில் சிக்கிய 8 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 6 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்திற்கு சொந்தமான கோலிஹான் சுரங்கம் இருக்கிறது. 2000 அடி ஆழத்தில் இருக்கும் அந்த சுரங்கத்தில் நேற்றிரவு கொல்கத்தாவைச் சேர்ந்த விஜிலென்ஸ் குழுவைச் சேர்ந்த 14 அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வை முடித்துவிட்டு, மின்னுயர்த்தி  (லிஃப்ட்) மூலம் அவர்கள் மேலே வந்து கொண்டிருந்தபோது, திடீரென கயிறு அறுந்து உள்ளே விழுந்துள்ளனர்.

குறிப்பாக, தலைமை விஜிலென்ஸ் அதிகாரி, காம்ப்ளக்ஸ் தலைவர், சுரங்கத்தின் துணை பொது மேலாளர் உள்ளிட்ட 13 பேர் சிக்கியதோடு, அவர்களுடன் சுரங்கத்தை புகைப்படம் எடுக்கச் சென்ற ஒரு பத்திரிகையாளரும் உள்ளே சிக்குண்டுள்ளார்.

தகவல் அறிந்து அங்கு வந்த மீட்புப்படையினர் 8 பேரை மீட்டுள்ளதுடன் இன்னும் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள மேலும் 6 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், சுரங்கத்தில் சிக்கியுள்ள மேலும் 6 பேரும் பத்திரமாக மீட்கப்படுவர் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .