2021 ஜூன் 21, திங்கட்கிழமை

முன்னாள் குத்துச்சண்டை வீரர் மரணம்

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 10 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 புதுடெல்லி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற  இந்தியாவின் முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் (வயது 42) காலமானார்.  கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, கடந்த ஆண்டு கொரோனா தொற்றும் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்ட அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்தார். எனினும், சிகிச்சை பலன்றி இன்று மரணமானார்.

இவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், குத்துச்சண்டை வீராங்கனை மோ கோம், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .