Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 மார்ச் 09 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சத்தீஸ்கரில் நபர் ஒருவர் தனது மனைவியைத் துண்டு துண்டுகளாக வெட்டி உடலை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் ‘போலி நாணயத்தாள்கள் அச்சடிக்கப்பட்டு வருவதாக‘ பொலிஸாருக்குக் கிடைக்கப்பட்ட தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இச்சம்பவம் அம்பலமாகியுள்ளது.
சம்பவ தினத்தன்று ‘பவன் சிங் தாக்கூர்‘ என்பவரின் வீட்டுக்குள் நுழைந்த பொலிஸார் அங்கு போலி நாணயத் தாள்கள் இருக்கின்றதா? என சோதனை நடத்தியுள்ளனர்.
இதன்போது அவரது வீட்டில் பணம் அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட பிரிண்டர் போன்ற கருவிகள் சிக்கின. அதே சமயம் அவரது வீட்டுக் குளியல் அறையில் இருந்தும் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் ,இளம் பெண்ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரது உடல்கள் 5 துண்டுகளாக வெட்டி பிலாஸ்டிக் பைகளுக்குள் இட்டு தண்ணீர் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விசாரணையில் குறித்த ”உடலானது தனது காதல் மனைவியுடையது எனவும், அவரது நடத்தையில் சந்தேகம் கொண்டதால் ஆத்திரத்தில் அவரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து விட்டதாகவும் பவன் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் உடலை வெளியே கொண்டு போய் எரித்தால் மாட்டிக்கொள்வோம் என நினைத்து உடலை பல துண்டுகளாக வெட்டி மறைத்து வைக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
டெல்லியில்கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ‘ஷ்ரத்தா‘ என்ற இளம்பெண்ணை ,அவரது காதலன் அஃப்தாப் அமீன் என்பவர் கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Jul 2025