Editorial / 2022 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது மனைவியை அவரது கணவன், மக்கள் முன்னிலையில் நிர்வாணமாக வற்புறுத்தியதுடன் கணவரின் உடன்பிறப்புகளும் அதற்கு ஒத்து ஊதியுள்ள சம்பவம், மராட்டிய மாநிலம் புனேயில் இடம்பெற்றுள்து.
பாதிக்கப்பட்ட புனேவை சேர்ந்த 30 வயதான பெண், தனது கணவர் மற்றும் அவருடைய சகோதர சகோதரிகள் மீது மேற்கண்டவாறு குற்றம் சாட்டியுள்ளார். அந்த பெண்ணின் புகாரின் பேரில், அவருடைய கணவர், மாமியார், உறவினர்கள் மற்றும் மவுலானா பாபா ஜமாதர் என்ற மந்திரீகவாதி உட்பட நான்கு பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.
அந்த பெண் 2013இல் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவரது கணவர் பணம் கேட்டு அவரை துன்புறுத்தத் தொடங்கினார். கடந்த 2013ஆம் ஆண்டு முதல், வரதட்சணை கேட்டும், தனக்கு ஆண் குழந்தை பிறக்காததற்காகவும் மாமியார் தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாக அப்பெண்ணின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து கணவர் மற்றும் கணவரின் உடன்பிறந்தவர்கள் பல சந்தர்ப்பங்களில் பல சாமியார்கள் சொல்வதை கேட்டு சில சடங்குகளைச் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அவரது கணவருக்கு கோலாப்பூரைச் சேர்ந்த ஒரு மவுலானாவுடன் தொடர்பு ஏற்பட்டது. பெண்ணின் கணவர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக மவுலானாவிடம் அழைத்துச் சென்று அங்கு அந்த பெண்ணுக்கு சூனியம் போன்ற மாந்திரீக பரிகாரங்களை செய்ததாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் அந்த பெண்ணின் கணவருடைய தொழில் லாபம் அடையும் என்று மவுலானா கூறியுள்ளார்.
சமீபத்தில் அவரிடம் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்க கணவரின் உடன்பிறந்தவர்கள் ஆலோசனை கேட்டுள்ளனர். அவர் அந்த பெண்ணை பொதுவெளியில் ஒரு நீர்வீழ்ச்சியின் கீழ் நிர்வாணமாக குளிக்கச் சொன்னார். அவ்வாறு செய்தால் அவருக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து அந்த பெண் ராய்காட் மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சடங்குகளைப் பின்பற்றி அந்தப் பெண்ணை முழு நிர்வாணமாக பொது மக்கள் பார்வையில் குளிக்க வற்புறுத்தினர் அதன்பின்னரே, தனது நேர்ந்த விடயங்கள் தொடர்பில் பொலிஸில் அப்பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
5 minute ago
18 minute ago
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
18 minute ago
24 minute ago
2 hours ago