Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2023 மே 31 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது மாமியாரை பெண்ணொருவர் ஆண் உடையில் வந்து அடித்துக் கொன்ற சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகே சீதபற்பநல்லூரை சேர்ந்தவர் சண்முகவேல். 64 வயதான இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர்
சீதாலட்சுமி. இவர்களுக்கு மாரியப்பன் என்ற மகன் உள்ளார். மாரியப்பனுக்கும் மகாலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மாரியப்பன் தனது பெற்றோரின் வீட்டின் அருகிலேயே மற்றொரு வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் மகாலட்சுமி அடிக்கடி தனது மாமியாரின் வீட்டுக்குச் சென்று வருவதாகவும், இதன்போது வீட்டில் இருந்த மளிகை பொருட்கள் உள்ளிட்ட சிறுபொருட்கள் திருட்டு போவதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமனாரின் வீட்டுக்கு சென்ற மகாலட்சுமி, அங்கிருந்த அலமாரியைத் திறந்து பணத்தை எடுத்ததாகவும், அதனைப் பார்த்த மாமியார் சீதாலட்சுமி அவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் சண்முகவேல் பால் கறப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மகாலட்சுமி ஆண்கள் அணிவதை போன்று நீளக் காட்சட்டையும், சட்டையும் அணிந்தும், தலையில் ஹெல்மெட் அணிந்தவாறு இரும்பு கம்பியுடன் மாமியாரின் வீட்டுக்குள் நுழைந்து உறங்கிக்கொண்டிருந்த சீதாலட்சுமியை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
. இதில் அலறி துடித்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதையடுத்து சீதாலட்சுமி அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை மகாலட்சுமி பறித்து சென்றார்.
பின்னர் காலையில் பால் கறந்து விட்டு சண்முகவேல் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் சீதாலட்சுமி இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக சீதாலட்சுமியை வைத்தியசாலையில் அனுமதித்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று சீதாலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே சண்முகவேலின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கெமரா பதிவுகளை பொலிஸார் ஆய்வு செய்தபோது அதில், மகாலட்சுமி ஹெல்மெட்டை கழற்றும் காட்சி பதிவாகியுள்ளது.
இதையடுத்து மகாலட்மியிடம் பொலிஸார் விசாரித்தபோது, தன்னை அவதூறாக பேசியதால் மாமியாரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் நகைக்காக மர்மநபர்கள் மாமியாரை தாக்கியிருக்கலாம் என்று அனைவரையும் நம்ப வைப்பதற்காக திட்டமிட்டு கொலையை அரங்கேற்றி நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து மகாலட்சுமியை கைது செய்தபொலிஸார் , அவரை சிறையில் அடைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago