Ilango Bharathy / 2021 ஜூலை 21 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் 45 தனியார் மருத்துவமனைகளில் நேற்று பொலிஸாரினால் சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது குளிர்சாதனப் பெட்டிகளில் மதுபானப் போத்தல்கள் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உ.பி. தலைநகர் லக்னோவில் கொரோனாத் தொற்றின் பரவல் காரணமாகத் தனியார் மருத்துவமனைகளிலும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதில்பெரும்பாலான மருத்துவமனைகளில் கட்டணம் அதிகமாகக் காணப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுக்கு புகார்கள் குவிந்தன. இதனையடுத்து 45 தனியார் மருத்துவமனைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு உரிமம் இல்லாமலும் அல்லது அரசு உரிமம் புதுப்பிக்கப்படாமலும் பெரும்பாலான மருத்துவமனைகள் இயங்கி வந்துள்ளதாகவும், குறிப்பாக சில மருத்துவமனைகளிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் மதுபானப் போத்தல்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அம் மருத்துவமனைகளை உடனடியாக மூடுமாறு லக்னோ மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
9 minute ago
13 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
17 minute ago