Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஜூன் 13 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள தலமலை ஊராட்சிக்கு உட்பட்ட தடசலட்டி, இட்டரை மற்றும் மாவநத்தம் ஆகிய மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் மர்மநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 13 நாட்களில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
இவர்களின் உயிரிழப்புக்கு தீவிர வயிற்றுப்போக்கும் வாந்தியும்தான் காரணம் எனக் கூறப்படுகின்ற நிலையில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 4 பேர் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது அவர்கள் அனைவரும் வீடு திரும்பியுள்ளனர்.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மலைக் கிராமங்களில் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருவதோடு, கிராமங்களில் சிறப்பு முகாம் அமைத்து அங்குள்ள மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.
மேலும், மக்கள் குடிநீராக பயன்படுத்தும் மேல்நிலைத்தொட்டி குடிநீர், கிணற்று நீர், குட்டை நீர் ஆகிய இடங்களில் நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சுகாதார அதிகாரிகள், குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .