Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 நவம்பர் 25 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரியலூர் ;
அரியலூர் அருகே பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்ஸோவில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தை மறைக்க முயன்றதாக தலைமையாசிரியையும் கைது செய்யப்பட்டார். காட்டுபிரிங்கியம் கிராமத்திலுள்ள அரசாங்க உயர்நிலைப் பாடசாலையுள்ளது. இங்கு, உடையார்பாளையம் அடுத்த பிலிச்சுக்குழி கிராமத்தை சேர்ந்தவர் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று அந்த பாடசாலையில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தலைமையாசிரியை மாணவி புகார் அளித்துள்ளதையடுத்து, மாணவி மற்றும் ஆசிரியரை அழைத்து பேசிய தலைமையாசிரியை, இதனை பெரிது படுத்த வேண்டாம் என கூறியுள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், இன்று பாடசாலையை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட அரியலூர் பொலிஸார் போக்ஸோவிலும், சம்பவத்தை மறைக்க முயன்ற தலைமையாசிரியையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் அதே பாடசாலையில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரைமுருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
28 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago