Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 01 , பி.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை, திருவொற்றியூர் பெரியார் நகரைச் சேர்ந்த ஒருவர், அப்பகுதியில் 30 வருடங்களாக தனியார் வகுப்புகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பரீட்சையில் சித்தியடையாத மாணவியொருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் வகுப்பு நிலையத்துக்கு படிக்க வந்துள்ளார்.
அப்போது மாணவிக்கும், தனியார் வகுப்பு நிலையத்தின் ஆசிரியருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவே, முறையற்ற தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த மனைவி, கணவனை தட்டிக் கேட்ட போது அவரை கொலை செய்து விடுவதாக தனியார் வகுப்பு ஆசிரியர் மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக மனைவி அளித்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து, தனியார் வகுப்பு ஆசிரியரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .